துதிப் பாடல்கள்

உம்மால் அழைக்கப்பட்டு

Ummaal Azhaikkappattu

உம்மால் அழைக்கப்பட்டு

உம்மில் அன்பு வைக்கும்

உமது பிள்ளைகளுக்கு

எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்

அன்பு தெய்வம் நீரே

நடந்ததோ நடப்பதோ

நடக்கவிருக்கும் காரியமோ

எதுவுமே உமதன்பை

என்னிடமிருந்து பிரிக்குமோ ...உம்மால்

முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது

பிள்ளைகளை அழைத்தீரே

அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி

மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே ...உம்மால்

எங்களுக்காக இயேசுவைகூட

மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்

ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு

மற்றவை எல்லாம் தந்தருள்வீர் ...உம்மால்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு