துதிப் பாடல்கள்

உம்மால் எல்லாமே ஆகுமே

Ummaal Ellaamae Aagumae

உம்மால் எல்லாமே ஆகுமே

உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை-2

1. காற்றை அடக்கி உம்மால் ஆகும்

கடலை பிளக்க உம்மால் ஆகும்-2

கஷ்டம் மாற உம்மால் ஆகும் - எம்மை

களிப்பாக்கு உம்மாலே ஆகும்

2. மலையை பிளக்க உம்மால் ஆகும்

மதிலை உடைக்க உம்மால் ஆகும்-2

மன்னா கொடுக்க உம்மால் ஆகும்-எம்மை

மகிழ்சியாக்க உம்மாலே ஆகும்

3, தவளை அனுப்ப உம்மால் ஆகும்

தடையை நீக்க உம்மால் ஆகும்-2

தண்ணீர் கொடுக்க உம்மால் ஆகும்-எங்கள்

தாகம் தீர்க்க உம்மாலே ஆகும்

4. பாவம் போக்க உம்மால் ஆகும்

சாபம் தீர்க்க உம்மால் ஆகும்

தூய்மையாக்க உம்மால் ஆகும்-எம்மை

பாதுகாக்க உம்மாலே ஆகும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு