துதிப் பாடல்கள்

உம்மாலேதான் எல்லாம் உம்மாலேதான்

Ummaaledhaan Ellaam Ummaaledhaan

உம்மாலேதான் எல்லாம் உம்மாலேதான்

நான் உயிருடன் வாழ்வது உம்மாலேதான்

என் சுகமும் பெலனும் ஜீவன் எல்லாம் உம்மாலேதான்

என் வாழ்வு வளமும் வல்லமையெல்லாம் உம்மாலேதான்

உம்மாலேதான் ஐயா உம்மாலேதான்

உம்மாலேதான் எல்லாம் உம்மாலேதான் -

என் துன்பம் இன்பம் ஆனது உம்மாலேதான்

என் துக்கம் சந்தோஷமானது உம்மாலேதான்

என் சாபம் ஆசீர்வாதமானது உம்மாலேதான்

என் சத்துரு வெட்கப்பட்டுப்போனது உம்மாலேதான் -

என் கண்ணீரெல்லாம் களிப்பானது உம்மாலேதான்

என் வறுமையெல்லாம் செழிப்பானது உம்மாலேதான்

நன்மை கிருபை தொடர்வதெல்லாம் உம்மாலேதான்

நான் நித்திய ஜீவனை பற்றிக்கொண்டதும் உம்மாலேதான்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு