உம்மை மறவாத மனம் வேண்டும் தேவா
ஒருபோதும் உம்மை மறவேன் - (2)
1. மனம் போன போக்கில்
ஓடிக்கொண்டிருந்தேன் தேவா
மனதினிலே மணமாய் வந்தீரே-2
2. சினிமாவின் மோகத்தில்
சீர்கெட்டு நின்றேன் தேவா
ஆன்மாவின் ஒளியாய் வந்தீரே-2
3. உலகத்தின் சேவை
போதுமென்றிருந்தேன் தேவா
உம் சேவைக்கென்று அழைத்தீரே-2