உம்மை மறவேன் என் இயேசுவே
உம்மை தொழுவேன் எந்நாளிலுமே - 2
உம்மை நான் நினைப்பேன்
ஒவ்வொரு நாளும் துதிப்பேன்
என் தெய்வமே - 2
உம்மை மறவேன் உம்மை மறவேன்
உம்மை மறவேன் என் இயேசுவே
தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
தந்தை என்னை வெறுத்த போதும்
நீர் என்னை வெறுப்பதில்லை - 2
தாய் போல தேற்றி
தந்தையைப் போல் அணைத்தீர் - 2
மார்மீது என்னை சாய்த்து
மகிழும் நல்ல மேய்ப்பனே - 2
கவலை கண்ணீரோடு
நான் கலங்கி நின்றபோது
கர்த்தா உம் கரம் என்னை
தேற்றி நடத்தி சென்றதே - 2
கலங்காதே என்று
கண்ணீரை துடைத்தீர்
திகையாதே என்று என்றும்
என்னோடு இருந்தீர்
நீரே என் தேவன் என்றும்
எனக்குள் வாழும் ஜீவன் - 2
கண்ணின் மணிபோல
என்னை தினம் காப்பவரே
காலங்களெல்லாம் உடனிருந்து
என்னை நடத்தினீரே - 2
இம்மட்டும் காத்த என் தேவன் நீரே
இனிமேலும் காக்கும் இம்மானுவேலே
உம்மை போல் தெய்வமில்லை
உலகில் நானும் சொல்ல - 2
உம்மை மறவேன் உம்மை மறவேன்
உம்மை மறவேன் என் இயேசுவே