உம்மை பிரியாத வரம் வேண்டுமே
என் பிரியமான எந்தன் இயேசுவே
உம்மை மறவாத வரம் வேண்டுமே
என்னை மறவாத எந்தன் நேசரே-2
உந்தன் பிள்ளை நான் அல்லவா
எந்தன் தந்தை நீரல்லவா-2
உம்மை விட்டு நான் பிரிந்தால்
உருகுலைந்து போய்விடுவேன்-2
திராட்சை செடி நீரல்லவா
உங்க கொடி நான் அல்லவா-2
செடியைவிட்டு கொடி பிரிந்தால்
அழிந்துதான்போய்விடுமே-2
எந்தன் நல்ல மேய்ப்பர் நீரல்லவா
உங்க ஆட்டுக்குட்டி நான் அல்லவா-2
மேய்ப்பரை விட்டு ஆடு பிரிந்தால்
திசைமாறிபோய்விடுமே-2
எந்தன் ஜீவன் நீரல்லவா
உங்க ஆலயம் நான் அல்லவா_2
உடலைவிட்டு ஜீவன் பிரிந்தால்
உதவாமல் போய்விடுமே-2
(உம்மை பிரியாத)