உம்மை தான் நம்பியிருக்கிறேன்
நீங்க கைவிடவே மாட்டீங்களே - இயேசய்யா (2)
கைவிடாத தெய்வம்
கரம் பிடிக்கும் கர்த்தர்
விடுவிக்கும் தேவன்
இரட்சிக்கும் இயேசு (2) - உம்மை
1. தேவையில்லா சிந்தை என்னை நெருக்கி வாட்டுதே
உம்மை விட்டு தூரம் போன போலிருக்குதே
சுய சிந்தனை மேலோங்கி தோற்று போனேனே
உம் கரத்தால் என்னை முற்றும் சேர்த்தணைத்தீரே (2) - கைவிடாத
2. சூழ்நிலைகள் உலக வேஷம் போட வைக்குதே
முள்ளின் நடுவே விதைக்கப்பட்ட விதையானேனே (2)
கர்த்தருக்காய் கனிகொடுக்க கடினமாகுதே
கிருபையால் விடுவித்து உயர்த்துகிறீரே (2) - கைவிடாத
3. தூஷணமும்நிந்தைகளும் ஒடுக்கி போடுதே
உறவுகளும் நட்புகளும் விலகி ஓடுதே (2)
எட்டுத் திக்கும் இருண்டதாய் காட்சியளிக்குதே
வெளிச்சமாய் உதித்து வந்து என்னை மீட்டீரே (2) - கைவிடாத
4. மகிமையின் கர்த்தரை மறக்கும் உலகிலே
மாற்றான் போன்ற அனுபவம் எனக்கு வேண்டாமே (2)
மறுரூபம் ஆகும் நேரம் வேகம் நெருங்குதே
மன்னராய் இயேசு வந்து ஆட்சி செய்வாரே (2) - கைவிடாத