துதிப் பாடல்கள்

உம்மை வாழ்த்திப் பாடுவேன்

Ummai Vaazhthip Paaduven

உம்மை வாழ்த்திப் பாடுவேன்

உம்மை உயர்த்தி மகிழுவேன்

இயேசு இரட்சகா என் வாழ்வின் நாயகா... - 2

உந்தன் வாக்குகள் எல்லாம் - அழுத மழை

நீர் காட்டிய பாதைகள் ஜீவ வழி... - 2

அந்த வழிகளிலே என்னை நடத்தும்... - 2

இயேசு இரட்சகா என் வாழ்வின் நாயகா!

உந்தன் வஸ்திரம் தொட்டவள் சுகம் பெற்றாள்

ஒரு வார்த்தையினாலே உயிர் பிழைத்தாள்... - 2

அந்த வார்த்தையினாலே குணப்படுத்தும்... - 2

இயேசு இரட்சகர் என் வாழ்வின் நாயகா!

நீர் சிந்தின வியர்வை திரு இரத்தம்

உம் வியாகுலம் எல்லாம் எனக்காக... - 2

அந்த பாடுகளால் என்னை மீட்டீர்... - 2

இயேசு இரட்சகர் என் வாழ்வின் நாயகா!

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு