உம்மை விட்ட யார் துணை நாதா
உம்மையன்றி எனக்கு யார் துணை தேவா -2
1. சுவாசம் தந்தவரும் நீர் தானையா - நான்
சுவாசிக்கும் சுவாசம் எல்லாம் நீர் தானையா- 2
ஆராதனை ஆராதனை ஆண்டவரே உமக்கு ஆராதனை -2
ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை -2
2. என்னை காப்பாற்றி நடத்தினாவர் நீர்தானே
என்னை வாழவைத்த தேவனும் நீர் தானே -2
3. மரண பள்ளத்தாக்கில் நான் இருந்த வேளையில்
தூக்கி எடுத்தீரே சுகமாக்கி நடத்தினீரே -2
4. நீர் எனக்குப் பாராட்டின கிருபையினாலே
ஆத்துமாவை பாதுகாத்து கொண்டதே - 2