துதிப் பாடல்கள்

உம்மைப் போல வேறொரு தெய்வம்

Ummaip Pola Veroru Theyvam

உம்மைப் போல வேறொரு தெய்வம்

தேடினாலும் காணேனையா

தம்மைத்தாமே பலியாய்த் தந்த

தியாக அன்பை மறவேணையா

இவ்வுலகம் தரமுடியாத

சமாதானம் தருபவர் நீரே

கலகத்தின் அதிபதியை

அதட்டி விரட்டி விடுபவர் நீரே

ஒருவரும் எடுத்திட முடியா

சந்தோஷம் தருபவர் நீரே

எவராலும் பறித்திட முடியா

சுக ஜீவன் தருபவர் நீரே

வியாதியில் துன்பருவோரை

சுகம் தந்து காப்பவர் நீரே

கலக்கத்தால் கண்களில் வழியும்

கண்ணீரைத் துடைப்பவர் நீரே -

சம்பூரண கிருபை எல்லாம்

என் வாழ்வில் பொழிபவர் நீரே

பரிபூரண வல்லமையினால்

நிரப்பி என்றும் மகிழ்பவர் நீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு