உன் பாரங்கள் இயேசுவின் மேலே
வைத்திடு நண்பனே
அவரே உன்னை ஆதரிப்பவர்
அவரே உந்தன் வாஞ்சை தீர்ப்பவர்
உன் பாரங்கள்
ஆபத்துக் காலங்களில் நல்ல நண்பனே
வியாதிப் படுக்கையில் பரம வைத்தியனே
கலங்காமல் திகையாமல்
என்றும் சேவிப்போம்
உன் பாரங்கள்
மலைகள் விலகினாலும் குன்றுகள் அசைந்தாலும்
கர்த்தர் தான் உன்னை காத்து நடத்திடுவார்
அவர் கிருபை என்றுமாய்
உன்னோடே உண்டு
உன் பாரங்கள்