உந்தன் அன்பை மறக்க முடியுமா -
இயேசையா உன்னை விட்டு பிரிய முடியுமா
என்னை நேசிக்கிற தேவன் நீரே
என்னை போஷிக்கிற தெய்வம் நீரே
1. பாதை தெரியாமல் இருந்தேன் ஒருநாள்
எதுவும் புரியாமல் அலைந்தேன் பலநாள்
கண்களை திறந்தீர் நேர்வழி காட்டுனீர்
சத்திய பாதையில் நித்தமும் நடத்தினீர்
2. உயர்வோ தாழ்வோ எனக்கெதிராக
வீழ்த்திட வந்தாலும் சோர்ந்திட மாட்டேன்
பசியோ பட்டினியோ துன்பமோ மரணமோ
எதுவும் வந்தாலும் தளர்ந்திட மாட்டேன்
3. வியாதி படுக்கையிலே கலங்கிய போது
ஆறுதல் தந்து அணைத்து தேற்றுனீர்
சோதனை நேரம் ஜெயமதை
தந்தீர்
ஒவ்வொரு நாளும் கிருபையால் காத்தீர்
4. ஒவ்வொரு நாளும் சுகம் பெலன் தந்தீர்
ஒவ்வொரு நேரமும் ஜெயமதை தந்தீர்
சோதனை நேரம் பெலமதை தந்தீர்
கலங்கிய நேரம் ஆறுதல் செய்தீர்