துதிப் பாடல்கள்

உங்க அக்கினியால் என்னை நிரப்பும்

Unga Akkiniyaal Ennai Nirappum

உங்க அக்கினியால் என்னை நிரப்பும்

உங்க கிருபையை என்மேல் அனுப்பும்

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பும்

உங்க வல்லமையால் என்னை மாற்றும்

உங்க அபிஷேகம் இறங்கட்டுமே

உங்க ஜீவனும் இறங்கட்டுமே

உங்க ஆவியும் இறங்கட்டுமே

உங்க வரங்களும் இறங்கட்டுமே - 2

முழு உள்ளத்தாலே உம்மை ஆராதிக்க வந்தோம்

முழு பெலத்தாலே உம்மை ஆராதிக்க வந்தோம் - 2

1. உயிருள்ள உமக்கே ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம்

கனத்தோடும் துதியோடும் கோடான கோடி ஸ்தோத்திரம்

சேனைகளின் கர்த்தருக்கு எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்

உயிரோடு உயிராக கலந்த என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம ;

2. சகலமும் படைத்த தேவனே உம்மைத் தொழுகிறோம்

தேவக்குமாரன் இயேசுவை நாங்கள் தொழுகிறோம்

பரிசுத்த ஆவியைத் தொழுகிறோம்

உம்மைத் தொழுகிறோம்

கேருபீன்களோடும் சேராபீன்களோடும் தொழுகிறோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு