உங்க அன்பின் அகலம் ஆழம்
உணர்ந்து கொள்ளும் போது
உள்ளான என் உள்ளம்
உறுதியாகின்றது – 2
உயரமானது அகலமானது
நீளமானது ஆழமானது
உம் அன்பு பெரியது
அளவுகள் அற்றது
உம் அன்பு என்னை
வாழ வைத்ததே – 2
1. உடைந்து போனதெல்லாம்
உம் அன்பால் இணையுமே
மரித்து போனதெல்லாம்
உம் ஆவியால் எழும்புமே – 2
உம் இரத்தத்தால் உம் வார்த்தையால் – 2
அழுக்கான இதயம் அழகாகுமே – 2
உயரமானது அகலமானது
நீளமானது ஆழமானது
உம் அன்பு பெரியது
அளவுகள் அற்றது
உங்க அன்பு என்னை
வாழ வைத்ததே – 1
2. வேண்டிகொள்கிறதற்கும்
மிகவும் அதிகமாய்
நினைப்பதற்கும் மேலாய்
அவர் செய்ய வல்லவராய் – 2
இருக்கின்றவர் இருப்பதாலே
இருக்கின்றவர் நம்முடன் இருப்பதாலே – 1
வேறெந்த அன்பும் பெரிதில்லையே
வேறெந்த அன்பும் நிகர் இல்லையே – 1