உங்க காலடியில் நான் காத்திருக்கேன்
பரிசுத்த ஆவியானவரே உங்க ஆவியால்
என்னை நிரப்பும் வரை
உம்மை விடமாட்டேன் ஆவியானவரே-2
உம்மை நான் துக்கப் படுத்தியிருந்தால்
என்னை மன்னித்து இறங்கி வாருமே-2
கிருபையின் ஆவியாய் நீர் வந்து
உம் கிருபையால் என்னை நிரப்பிடுமே-2
மகிமையின் ஆவியாய் நீர் வந்து
உம் மகிமையால் என்னை நிரப்பிடுமே-2
சத்திய ஆவியாய் நீர் வந்து
உம் சத்தியத்தில் என்னை நடத்திடுமே-2
நித்திய ஆவியாய் நீர் வந்து
உம் நித்தியத்தில் என்னை நடத்திடுமே-2
ஞானத்தின் ஆவியாய் நீர் வந்து
உம் ஞானத்தினால் என்னை நிரப்பிடுமே-2
நியாயத்தின் ஆவியாய் நீர் வந்து
உம் நியாயத்தில் என்னை நடத்திடுமே-2
பெலனுள்ள ஆவியாய் நீர் வந்து
உங்க பெலத்தால் என்னை நடத்திடுமே-2
உற்சாகத்தின் ஆவியாய் நீர் வந்து
உங்க உற்சாகத்தால் என்னை நடத்திடுமே-2