துதிப் பாடல்கள்

உங்க உள்ளகையிலே

Unga Ullagaiyilae

உங்க உள்ளகையிலே என்னை

வரைந்துக் கொண்டீரே

என்னை நடத்தி செல்லும்

காத்துக் கொள்ளும் அன்பின் தெய்வமே

நல்லவரே வல்லவரே அடைக்கலமே

எங்கள் ஆதரவே

நான் ஒன்று நினைத்தால் நீர் ஒன்று செய்கிறீர்

எல்லாம் நன்மைக்கு தானே

விசுவாசப் பாதையில் தடுமாறும் போது

கிருபையால் தாங்கி கொள்கிறீர்

உம் சித்தம் போல் என்னை நீர் நடத்தும்

என் இஷ்டம் ஒன்றுமேயில்லை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு