உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழலினிலே
அடைக்கலம் என்பேன் ! கோட்டை என்பேன் !!
தேவன் என்பேன் !!! நம்பி இருப்பேன் !!!!
1, பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிக்க வல்லவரே
சிறகின் நிழலினிலே அடைக்கலம் தந்தவரே - 2
2, வழிகளில் காக்கும் படி தம் தூதர்கள் அமைத்தவரே
பாதம் கல்லில் இடறாமலே கைகளில் ஏந்தி கொண்டார்கள் - 2
3, சிங்கங்கள் மீதினிலே நடந்திட பெலன் தந்தீரே
வாஞ்சையாய் இருந்ததினால் உயரத்தில் வைத்தவரே - 2
4, நோக்கி கூப்பிட்டதால் மறு உத்தரவு அருளினீரே
நீடித்த நாட்களிலே உம் இரட்சிப்பை காண்பித்தீரே - 2