உன்னை படைத்த தேவன்
இன்று உன்னை அழைக்கிறாரே
மகனே ஓடி வா மகளே நம்பி வா
1. உன் கண்ணீரை துடைத்திடுவார் - அவரே
உன் துக்கம் மாற்றிடுவார்
வேதனை நீக்கிடுவார் -அவர்
உன் பாரங்கள் அகற்றிடுவார்
2. சாத்தானின் சதிமோசமா
உன் வாழ்வில் சத்துரு போராட்டமா
மனதில் குழப்பங்களா -உள்ளம்
நிலையின்றி அலைகின்றதா
3. பலவித பாடுகளும் போக்கி
விடுதலை தந்திடுவார்
பலவித ரோகங்களும் நீக்கி
சுகம் தந்து நடத்திடுவார்
4. இன்று நீ வந்துவிடு -உந்தன்
உள்ளத்தை தந்துவிடு
நிம்மதி அழித்திடுவார் அவரே
நித்தியம் சேர்த்திடுவார்