துதிப் பாடல்கள்

உருகுது உருகுது உள்ளமெல்லாம்

Urugudhu Urugudhu Ullamellaam

உருகுது உருகுது உள்ளமெல்லாம்

உம் அன்பை நினைக்கையிலே

பெருகுது பெருகுது வெள்ளமென

உம் கிருபை எனக்குள்ளே-2

எனக்காய் சிலுவை சுமந்தீர் அன்று

அதனால்தானே பிழைத்தேன் இன்று-2

உவ்வொரு நாளும் உமக்குள்ளே நான்

நிலைத்திட வேண்டிடுவேன்

கண்மணிபோல் எனை காத்திடும் தேவனின்

கரமதை விட மாட்டேன்-2

ஒரு வழியாக உம்மிடம் சேர்ந்தேன்

திரும்பவும் போவேனோ

உம் சந்நிதி மறப்பேனோ

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்

நினைப்பாய் இருப்பவரே

உணர்வாய் உயிராய் உள்ளம் முழுதும்

வலம் வரும் ஆண்டவரே-2

தேவரீர் எந்தன் துணையாய் இருந்து

விடுதலை தந்தீரே-என்னை

உமக்கென தெரிந்தீரே

மடங்கிய என்னைத் தாங்கிய தேவனில்

அடங்கிட வேண்டிடுவேன்

விழுகிற என்னைத் தூக்கிடும் தேவனைத்

தொழுதிட நாடிடுவேன்-2

அழுகிற போது அரவணைத்தீரே

ஆறுதல் தந்தீரே-ஐயா

அடைக்கலம் கொடுத்தீரே

உலகம் உண்டாகும் முன்னே என் பெயரை

முன் குறித்து வைத்ததென்ன

வானமும் பூமியும் படைத்தவராலே

ஒத்தாசை வந்ததென்ன-2

இதற்கென்று ஈடாய் உமக்கென்று நானும்

இதுவரை தந்ததென்ன இந்த

அன்பிற்கு விலையும் என்ன-

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு