உயரமும் உன்னதமும் ஆன
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தர் ஆகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
பரிசுத்தர் பரிசுத்தரே – நீர் (2)
The LORD of The Host is Holy (3)
Holy are you Lord
ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்போம்
ஆதியும் அந்தமுமானவர் இவர்
அல்பா ஒமெகாவுமானவர் இவர்
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்
துதிகன மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவோம்
சகலத்தையும் படைத்திட்ட சிருஷ்டி கர்த்தர்
சாவாமையுள்ளவர் என் இயேசுவே
சர்வ லோகத்தின் ஆண்டவர் இவர்
சர்வ வல்லவர் என் இயேசுவே