உயிரே நான் உம்மை துதிப்பேன்
இந்த உலகம் எல்லாம் உம்மை சொல்வேன்
ஜீவன் தந்த தேவ - ஆவியே உம்மை
தினந்தோறும் பாடி மகிழ்வேன்
1. நானே வழி சத்தியமும் ஜீவனும் என்றீர்
இந்த தேசம் அனைத்தையும் ஆட்சி செய்கிறீர்
வானம் பூமியும் - உங்கள் கையிலே
வாஞ்சை கொண்ட மக்களை தேடி வந்திரே
(உயிரே)
2. பாசமுள்ள தேவனும் நீரே - நீரே
இந்த பாருக்குலே உண்மை உள்ள தெய்வமானீரே
நேசமும் கருணையும் - உள்ளவர் - நீரே
உம்மை நம்பும் மக்களுக்கு வாழ்வளித்தீரே
(உயிரே)