துதிப் பாடல்கள்

உயிரினும் மேலான

Uyirinum Melaana

உயிரினும் மேலான

என் உன்னதர் இயேசுவையே

என் உயிருள்ள நாள் வரைக்கும்

நான் உயர்த்தி பாடிடுவேன் பாடுவேன்

பாடுவேன் அவரைப் பாடுவேன்

போற்றுவேன் இயேசுவைப் போற்றுவேன்

கர்த்தர் செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம்

அத்தனைக்கும் நன்றி சொன்னால் ஆயுள் பல செலவாகும்

உயிர் வாழும் நாட்களெல்லாம் நன்றி சொல்லும் மனம் வேண்டும்

கண்ணீரோடு எப்போதும் அவர் பாதம் தொழ வேண்டும் -

நித்திய ஜீவன் தந்தார் நிரந்தர அமைதி தந்தார்

தித்திக்கும் அவர் பெயரை எத்திக்கும் பாடவைத்தார்

எட்டி எட்டி போன என்னைச் சுற்றி சுற்றி தேடி வந்தார்

சத்தியம் பற்றிக்கொண்டு வாழ்ந்திடக் கற்றுத் தந்தார்

அவரே என் தாபரம் நிலையான வாசஸ்தலம்

எப்போதும் நான் தங்கும் என் அன்பின் அடைக்கலம்

ஆபத்துக் காலத்திலே நான் நம்பும் நங்கூரம்

அவர் புகழ் பாடுவேன் ஓயாமல் எப்போதும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு