வாடி நின்றேன் வழியிலே
சோர்ந்து போனேன் மனதிலே
இயேசு என் அருகில் வந்து
அணைத்துக் கொண்டார் கரத்திலே
சோதனைகள் வந்தபோது விடுவித்தீர் ஐயா
வேதனைகள் வந்தபோது தாங்கினீர் ஐயா
நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா
காலமெல்லாம் துதித்து போற்றுவேன் - 2
கண்ணீரோடு வந்தபோது ஆறுதல் தந்தீங்க
கலக்கமாய் வந்தபோது தேற்றி விட்டீங்க - 2
அருகினில் வந்த என்னை அழைத்துக்கொண்டீங்க
அருமை வசனம் தந்து காத்து கொண்டீங்க - 2