துதிப் பாடல்கள்

வாலிபனே எழுந்து நீயும்

Vaalibanae Ezhundhu Neeyum

வாலிபனே எழுந்து நீயும் வா

என் இயேசுவுக்காய் ஊழியம் செய்திட வா

அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம்

எழுந்து வா எழுந்து வா வாலிபனே நீ வா

திறப்பின் வாசலில் நிற்க நீயும் ஓடி வா

அறுவடைப் பணியைச் செய்ய நீயும் ஓடி வா

உழைத்திடு செயல்படும் இயேசுவின் ராஜ்ஜியத்தில்

காலமில்லை நேரமில்லை வாலிபனே நீ வா

அழியும் மாந்தரை மீட்க நீயும் ஓடி வா

பாவத்தின் வழியில் செல்லும் மாந்தரை மீட்க வா

உலக இன்பத்தை மறந்து நீயும் ஓடி வா

உல்லாச வாழ்வை வெறுத்து நீயும் ஓடி வா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு