துதிப் பாடல்கள்

வாலிபனே உந்தன் இளமையில்

Vaalibanae Undhan Ilamaiyil

வாலிபனே உந்தன் இளமையில்

வல்லவராம் சிருஷ்டிகரை நினைத்திடு

தீங்கு நாட்கள் வருவதற்கு முன்னமே

எதையும் பிரியமில்லை என்று சொல்லும் முன்னமே

சூரியன் சந்திரன் இருண்டுபோம்

வானில் விண்மீன் ஒளியும் மங்கும் முன்னே

வாலிபனே மனந்திரும்பி வாழ்ந்திடு

நீயும் இரட்சிப்பின் வழிகளிலே நிலைத்திடு

மழைக்குப் பின்னே மேகங்களும்

திரும்ப வருவதற்கு முன்னமே

காவலாளிகள் தள்ளாடியே

பெலவான்கள் கூனிப்போகும் முன்னமே

எந்திரம் அரைக்கிறவர் ஓய்ந்து போய்

மேலும் பலகணியாய் பார்க்கிறவர்இருண்டு போய்

எந்திரம் சத்தம் தாழ்ந்து போகும் முன்னமே

வாசல் கதவுகள் அடைபடும் முன்னமே

வாலிபனே மனம் திரும்பி வாழ்ந்திடு

நீயும் இரட்சிப்பின் வழிகளிலே நிலைத்திடு

குருவி அதன் சத்தத்திற்கு

பயந்து எழுந்திருக்கும் முன்னமே

கீத வாத்தியக்கன்னிகைகள்

அடங்கிப் போவதற்கு முன்னமே

மேட்டுக்காக அச்சம் தோன்றும் முன்னமே

போகும் வழியிலே பயங்கள் தோன்றும் முன்னமே

வாதுமை மரம் பூக்கும் முன்னமே - சின்ன

வெட்டுக்கிளியும் பாரம் ஆகும் முன்னமே

வாலிபனே மனந்திரும்பி வாழ்ந்திடு

நீயும் இரட்சிப்பின் வழிதனிலே நிலைத்திடு

பசித்தீபனம் அற்றுப் போயுமே

மனுஷன் நித்திய வீட்டில் சேரும் முன்னே

துக்கம் கொண்டாடும் மனிதர்களும்

வீதியில் திரிவதற்கு முன்னமே

வெள்ளிக் கயிறு கட்டு விட்டு போகும் முன்னே - உனது

பொற்கிண்ணி நசுங்கி போகும் முன்னே - அங்கே

ஊற்றண்டை சால் உடைந்து போகும் முன்னே

துறவண்டை உருளை நொறங்கும் முன்னே

வாலிபனே மனம்திரும்பி வாழ்ந்திடு

இரட்சிப்பின் வழிதனிலே நிலைத்திடு

மண்ணானது முன்பிருந்த பூமிக்குத்

திரும்பிப்போகும் முன்னே

ஆவிதானும் தேவனிடமாய்

மறுபடியும் போவதற்கு முன்னமே

கடவுளுக்கு பயந்து நீயும் வாழ்ந்திடு

தேவக்கற்பனையைக் கைக்கொண்டு நடந்திடு

நன்மையோ தீமையோ நியாயமது

ஒரு நாள் தேவன் தாமே

கொண்டுவந்து நிறுத்திடுவார்

வாலிபனே மனந்திரும்பி வாழ்ந்திடு

நீயும் இரட்சிப்பின் வழிதனிலே நிலைத்திடு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு