வானாதி வானம் கொள்ளாத
இந்த வையகம் அறியமுடியாத
வல்லமை கர்த்தர் அவர்
வேண்டிடும் குரல் கேட்பார்
அவர் வாஞ்சை எல்லாம் தீர்ப்பார்.
1. மரித்த லாசருவை அவர்
மகிழ்ச்சியுடன் எழுப்பினார்
மனம் நொந்து வாடும் உன்னை
நல் மனதுடன் அவர் காப்பார் - வானாதி வானம்
2. உண்மையின் தேவன் அவர்
இந்த உலகத்தில் வந்தவர்
ஊக்கத்தோடு ஜெயிப்பவருக்கு
உண்மையோடு பதில் அளிப்பார் - வானாதி வானம்
3.நித்திய தேவர் அவர்
இன்றும் நீதியை நடப்பிப்பவர்
நீதிமான் அனைவரையும்
நித்தியம் கொண்டு சேர்ப்பவர் - வானாதி வானம்