வாங்க வாங்க இயேசுவை துதிக்கலாம்
துதித்து துதித்து சாத்தான மிதிக்கலாம் - 2
கர்த்தர் நமக்கு
நன்மை செய்தாரே - 2
நன்றியோடு பாடிடுவோம்
நன்றி சொல்லி
மகிழ்ந்திடுவோம் - 2
1. வாலாக்காமல் நம்மை தலையாக்கினார்
கீழாக்காமல் நம்மை மேலாக்கினார் - 2
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்தார் - 2
கரங்கள் தட்டி பாடிடுவோம்
கவலைய மறந்து ஆடிடுவோம்
2. தாவீதைப் போல விருத்தியாக்கினார்
நாளுக்கு நாள் நம்மை திருப்தியாக்கினார் - 2
கர்த்தர் நமக்காய் நன்மை செய்தார் - 2
3. உயிரோடு இருக்கும் வரை கர்த்தரைப்பாடுவோம்
உயிர் விட்டு பிரிந்தால் அவரோடு வாழுவோம் - 2
கர்த்தர் நமக்காய் இரக்கம் செய்தார் - 2