துதிப் பாடல்கள்

வானிலே மகிமை

Vaanilae Magimai

வானிலே மகிமை பூமியில் அமைதி

மனுஷரில் பிரியம் உண்டாகுமே

அதிசயமானவர் இவர் ஆலோசனைக் கர்த்தர்

வல்லமை தேவனாம் நித்தியமானவர்

இவரே நம் சமாதானப் பிரபு

இருளினில் வெளிச்சமாய் இகத்தினில் உதித்தவர்

பாவங்கள் போக்கவே பாரினில் உதித்தவர்

இவரே நம்மை மீட்கும் ரட்சகர்

தூதர்கள் பாடிடும் தேவனின் மைந்தனாம்

சாஸ்திரிகள் மேய்ப்பர்கள் பணிந்திடும் பாலனாம்

இவரே யூதரின் ராஜாவானவர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு