வாழ்க்கை என்னும் ஓடம்
இயேசு இல்லையென்றால் வாடும் ஓ . . . ஓ . . .
இயேசு இல்லையென்றால் வாடும்
ஏலேலோ ஐலஸா -
பயணம் செய்யும் படகை நோக்கி அலையும் வந்திடலாம்
நீ சோர்ந்து போகும் வேளையிலே புயலும் வீசலாம் - 2
கண்ணிமைக்கும் நேரத்திலே கவிழ்ந்தும் போகலாம்
உன் படகினிலே இயேசுயிருந்தால் நிலைத்து நின்றிடலாம் - 2
ஏசி பேசி உன்னை தாழ்த்தும் மனிதருமுண்டு
உடனிருந்து உன்னைக் கெடுக்கும் நண்பருமுண்டு - 2
உதவிடும் மனிதர் கூட கைவிடுவதுண்டு
நீ பயப்படாதே உன்னை காக்க வல்லவருண்டு - 2
கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தாலே
அவர் உன்னிடமாக சாய்ந்து உந்தன் கூக்குரல் கேட்பார் - 2
கடுகளவேனும் உன்னை கைவிடமாட்டார் - 2
அந்த கர்த்தர் இயேசு உன்னை என்றும் மறந்திட மாட்டார் - 2