வாழ்வு தந்த வள்ளலே - புது
வாழ்வு தந்த வள்ளலே
உம்மை நாடி தேடி ஓடி வந்ததால்
நல்ல மேய்ப்பனென்று
உம்மை நம்பியதால் - 2
யாரும் நேசிக்காத
கழுதை போலானேன் - 2
என்னையும் நேசித்தீரே
உம் அன்பை பாடுவேன் - 2
இமைபொழுதில்
என்னை நீர் கைவிட்டாலும் - 2
உம்முடைய இரக்கங்களால்
என்னை நீர் சேர்த்துக் கொண்டீர் - 2
திறமையில்லாதவனாய்
ஒதுக்கப்பட்டேனே - 2
உம்மேன்மை எனக்கு தந்து
நல் ஈவு ஈந்துவிட்டீர் - 2