வல்லமை அனைத்தும் தந்து விட்டார்
ஊழியம் செய்ய தயக்கம் ஏன் ?
மனுசனே மனுஷியே
சிந்தித்து நீ செயல்படு -2
1. பரலோகில் உன் பெலன் பெருக நீ
ஊழியம் செய், - நீதிமான் நீதிமான்
சிந்தித்து நீ செயல்படு -2
2. உனக்குள்ளே உன் கிரீடத்தை பெற்றுகொள்ள நீ
ஊழியம் செய் - சகோதரர் சகோதரி
சிந்தித்து நீ செயல்படு -2
3. எஜமானின் பாத்திரமாய் பயன்பட நீ
ஊழியம் செய் - பாத்திரனே பாத்திரரே
சிந்தித்து நீ செயல்படு -2
4. பெற்று கொண்ட தாலந்துகள் பெருக நீ
ஊழியம் செய் - உத்தமன் உத்தமியே
சிந்தித்து நீ செயல்படு -2
5. தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்திட நீ
ஊழியம் செய் - பிரியனே பிரியமா
சிந்தித்து நீ செயல்படு -2
6. மலையின் மேல் உன் பாதம் அழகாய் மாறிட
ஊழியம் செய் - வாலிபனே கன்னிகையே
சிந்தித்து நீ செயல்படு -2
7. பிதாவின் குணம்பெற இயேசுவுக்கு
ஊழியம் செய் - ஊழியனே ஊழியரே
சிந்தித்து நீ செயல்படு -2