வல்லமை வேண்டும் இன்றே வேண்டும்
அக்கினி வேண்டும் எங்கள் சபையிலே
ஆலயம் நிரம்பும் ஊழியம் பெருகும்
மகிமையில் வளரும் இந்த நாளிலே
நன்றி சொல்லுவோம் நன்றி சொல்லுவோம்
நன்றி சொல்லுவோம் இயேசுவே (உமக்கே)
கிருபை வேண்டுமே உம் வரங்கள் வேண்டுமே
கனிகள் வேண்டுமே வாழ்விலே
அன்பு வேண்டுமே ஜெப ஆவி வேண்டுமே
நாம் ஜெபிக்கும் போதெல்லாம் பிரசன்னமே
புது புது பாஷை நமக்கு வேண்டும்
பெரிய காரியங்கள் நாங்கள் செய்திடுவோம்
வல்லமை மேலே வல்லமை வேண்டும்
மகிமையின் மேலே மகிமையே
நீர் தொட்டால் போதுமே என் வாழ்க்கை மாறுமே
உம் தொடுதல் வேண்டுமே இயேசுவே
அன்பு கூறுவேன் என் வாழ்வின் நாளெல்லாம்
என் உள்ளம் பாடுமே உம்மையே
பரிசுத்தம் வேண்டுமே என் பாவம் மாறுமே
உம் ரத்தம் என்னை கழுவுமே