வழி அறியா தவிக்கையிலே இயேசைய்யா
உம் வழியை எனக்கு காட்டினீரே இயேசைய்யா-2
இயேசைய்யா என் இயேசைய்யா-4
1. கஷ்டத்தினால் கலங்கி நானும் அலைகையில்
கண்ணீரிலே மூழ்கி நான் தவிக்கையில்-2
கர்த்தர் என்மேல் மனதுருகி வந்தீரே -என்
கண்ணீருக்கு பதிலையும் நீர் தந்திரே-2
2. ஜனங்களுக்கு அற்புதங்கள் காட்டினீர் -ஆனால்
மோசேக்கு உமது வழியைக் காட்டினீர்-2
அற்புதரின் வழியை எனக்கு போதித்து
அற்புதமாய் தினமும் என்னை நடத்தினீர்-2
3. ஆகாரை போல நானும் அழுகையில்
அனாதை போல் அலைந்து நான் தவிக்கையில்-2
எல்ரோயி தெய்வமாய் வந்தீரே
என்னைக் கண்டு என் கண்ணீர் துடைத்தீரே-2