வெட்கப்படமாட்டேன் நான்
வெட்கப்படமாட்டேன் - ஆண்டவரை
ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்
பாட்டுப்பாடி ஆண்டவரை ஆராதிப்பேன்
நடனமாடி ஆண்டவரை ஆராதிப்பேன்
வெட்கப்படுத்தும் சாத்தானே போ போ
இயேசு நாமத்தாலே வெரட்டுகிறேன் போ போ
பாவம் போக்கினாரே வெட்கப்படமாட்டேன்
சாபம் நீக்கினாரே வெட்கப்படமாட்டேன்
வாழ்வு தந்தாரே வெட்கப்படமாட்டேன் .
வல்லவரைப் பாட வெட்கப்படமாட்டேன்
யார் என்ன சொன்னாலும் வெட்கப்படமாட்டேன்
ஏளனம் பண்ணாலும் வெட்கப்படமாட்டேன்
இகழ்ந்து பேசினாலும் வெட்கப்படமாட்டேன் .
இயேசுவைப் புகழ்ந்துபாட வெட்கப்படமாட்டேன்
கருவில் கண்டாரே வெட்கப்படமாட்டேன்
தெரிந்து கொண்டாரே வெட்கப்படமாட்டேன்
அணைத்துக் கொண்டாரே வெட்கப்படமாட்டேன்
அவரைப் போற்றிப்பாட வெட்கப்படமாட்டேன்