துதிப் பாடல்கள்

விண்ணகத் தலைவனுக்கு

Vinnagath Thalaivanukku

விண்ணகத் தலைவனுக்கு

மண்ணிணில் ஆராதனை

விண்ணிலும் ஆராதனை... - 2

மண்ணிணில் மனுஷனை உருவமைத்து

ஜீவ சுவாசம் ஊதிவிட்டு... - 2

தனிமையில் இருந்து மனுஷனை நினைத்து

ஏற்றதுனை கொடுத்து மகிழ்ந்தவரை

ஏதேனில் தொடங்கிய பாவத்தினை

கொல்கொதா மலையில் முடித்துவைத்து... - 2

தூய இரத்தம் சிந்தி மீட்டவர்கள்

சீயோனில் பாடி மகிழவைத்த

மீண்டுமாய் வருவேன் என்றுரைத்து

பரிசுத்தமாய் ஆவியால் எமை நிறைத்து... - 2

தூதருடன் வரும் தெய்வத்தையே

காத்து நிறப்போம் வழி பார்த்து நிற்போம்

ஆவியின் கனியை எமக்கு தந்து

ஆத்தும பாரத்தை எமக்குள் வைத்த... - 2

ஆண்டவர் இயேசுவின் அன்பினை சொல்லி

ஆத்தும அறுவடை செய்திடுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு