விரும்புகிறவனுமல்ல ஓடுகிறவனுமல்ல
இரங்குகிற இயேசுவாலே எல்லாம் ஆகும் (2)
1. கிதியோனோ கேட்கவில்லை
பலவானென்று நினைக்கவில்லை
பராக்கிரமசாலி என்று அழைத்து அனுப்பி வைத்து
உடனிருந்து ஜெயிக்க வைத்தீர் உம்மையே துதிக்க வைத்தீர்
- விருப்புகிற
2. தாவீது தேடவுமில்லை தலைவனாய் எண்ணவுமில்லை (2)
துதிக்கும் இடத்தில் கண்டு கொம்பினால் அபிஷேகித்து (2)
அரியணையில் அமர வைத்தீர்
சங்கீதங்கள் பாட வைத்தீர் - விருப்புகிற
3. அத்சாளோ அறியவில்லை அனாதை போல் வாழ்ந்து வந்தாள் (2)
வஸ்தியை மாற்றிவிட்டு பட்டத்து ராணியாக்கி (2)
இஸ்ரவேலை மீட்க வைத்து
அமைதியாக வாழ வைத்தீர் (2) - விருப்புகிற
4. யோசேப்போ யோசிக்கவில்லை சிறையிலே ஜீவனம் செய்தான் (2)
சொப்பனமும் விளக்கமும் கொடுத்து ஞானத்தால் நிரப்பி வைத்தீர் (2)
அரியணையில் அமரச் செய்தீர்
எகிப்தெங்கும் ஆள வைத்தீர்- விருப்புகிற