விழுந்து போன தாவீதின் கூடாரத்தை
திரும்ப எடுத்து கட்டும் தெய்வமே - 2
1. அதின் திறப்புக்கள் அடைத்து
பழுதானதை சீர்படுத்தி - 2
பூர்வ நாட்களில் இருந்தது போல
பூர்த்தியாக்கிடும் என் தெய்வமே - 2
2. ஏதோமிலே மீதியானவர்கள்
எத்தனையோ - 2
உமது ஜனமாய் மாற்றி கொள்ளுமே
உம் நாமம் விளங்க உதவி செய்யுமே - 2
3. துதி எழும்பட்டும் மீண்டும்
ஜெபம் எழும்பட்டும் - 2
இரவும் பகலும் கீத வாத்தியங்கள்
இடைவிடாமல் என்றும் தொனிக்கட்டும் - 2