துதிப் பாடல்கள்

யார் எனக்கு துரோகம்

Yaar Enakku Thurogam

யார் எனக்கு துரோகம் செய்தாலும் - ஐயா

நீர் எனக்கு துரோகம் செய்வதில்லை - 2

யார் என்னை மறந்து போனாலும் - 2

ஐயா என்னை மறப்பதே இல்லை -2

என்னை தெரிந்து கொண்டவரே

என்னை தேடி வந்தவரே

பெயர் சொல்லி அழைத்தவரே

என் இயேசுவே - 2

1. நம்பின மனிதன் துரோகம் செய்தாலும்

செய்த நன்றியை மறந்து

தூர போனாலும் - 2 - நான்

நீர் என்னை விட்டு தூர போவதில்லை

நான் உம்மை என்றும்

மறந்து போவதில்லை - 2

2. உலகம் எனக்கு துரோகம் செய்தாலும்

அதில் உறவும் கூட

கலந்திருந்தாலும் - 2 - இந்த

நீர் அன்னைக் கருவில்

என்னைக் கண்ட தேவன்

நீர் என்றும் எனக்கு

துரோகம் செய்வதில்லை - 2

3. நான் உமக்கு துரோகம் செய்தாலும்

ஐயா நீர் எனக்கு நன்மை

செய்கின்றீர் - 2 - ஐயா

நீர் நன்மை செய்து

சோர்ந்து போவதில்லை

உம்மை நம்பினதால் கைவிடுவதில்லை - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு