யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காக செய்து முடிப்பார் - 2
1.சந்துருவின் கையினின்று என்னை மீட்டிடவே
கர்த்தர் எனக்காக யுத்தம் செய்திடுவார் (2)
அவர் என் பட்சத்தில் இருப்பதினால்
அசைக்கப்படுவதில்லை என்றென்றுமே (2) -யாவையும் செய்து
2. அக்கிரமத்தின் கட்டிலிருந்து என்னை மீட்டிடவே
கர்த்தர் எனக்காக சாபமானார் (2)
சிலுவையில் என் பாவங்கள் சுமந்து தீர்த்தார்
நித்திய இரட்சிப்பைத் தந்தருளினார் (2) -யாவையும் செய்து
3.பாவம் சாபம் நோயினின்று என்னை மீட்டிடவே
கர்த்தர் எனக்காய் பரிகாரியானார் (2)
அவர் என் தலையை நிமிரச் செய்வார்
வெட்கமடைவதில்லை எந்நாளுமே (2) - யாவையும் செய்து