1.இயேசு அப்பா என் நேச அப்பா
இயேசு அப்பா என் சொந்த அப்பா -2
இன்பம் தரும் இயேசு அப்பா
இன்னல் நீக்கும் இயேசு அப்பா -2
2.மகிமை நிறைந்த அப்பா
மகத்துவத்தை அணிந்த அப்பா -2
மாசில்லாத தூய அப்பா
மானிடரை நேசிக்கும் அப்பா -2
3. பரிகாரியான அப்பா
பரம பிதாவான அப்பா -2
பரிசுத்தம் நிறைந்த அப்பா
பரலோகில் வீற்றிருக்கும் அப்பா - 2
4. ஜெபமதைக் கேட்கும் அப்பா
ஜெயமதைக் கொடுக்கும் அப்பா -2
ஜெய வேந்தரான அப்பா
ஜெயம் என்றும் உமக்கே அப்பா -2
5. பாரினில் மிகப்பாடுகள்
பாவிகட்காய் அடைந்த அப்பா -2
பாரக்குருசில் ஜீவனையும்
பாவிகட்காய் விட்ட அப்பா -2
6. உன்னதங்களில் உயர்ந்த அப்பா
உலகோர் வானோர் வணங்கும் அப்பா -2
உண்மையான மெய் தேவன் அப்பா
உலகம் தோன்றும் முன்னே இருக்கும் அப்பா -2
7. சாவாமையை உடைய அப்பா
சாவாமையைக் கொடுக்கும் அப்பா -2
அழியாமையை உடைய அப்பா
அழியா ராஜ்யமதைக் கொடுக்கும் அப்பா -2
8. துன்பம் துயர் துடைக்கும் அப்பா
கவலை கண்ணீர் போக்கும் அப்பா -2
நோய் வியாதி நீக்கிடும்
நல்ல அப்பா இயேசு அப்பா
9. இயேசு அப்பா என் அன்பின் அப்பா
என்றும் நான் உம் அடியான் அப்பா -2
இயேசு அப்பா என் ஆருயிர் அப்பா
எப்போதும் நான் உம் அடிமை அப்பா -2