துதிப் பாடல்கள்

இயேசு என்றதுமே

Yesu Endradhumae

இயேசு என்றதுமே - எனக்கோர்

இன்பம் பிறக்குதம்மா

காசினில் அவர் போல் - எவரையும்

கண்டதும் இல்லையம்மா

பேசத் தொடங்கினாலோ

பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா (2)

பார்க்கத் தொடங்கினாலோ - பார்வையெல்லாம்

பாவி நம் மேலேயம்மா (2)

கஷ்டப்படுவோரைக் கண்டதும்

கண்ணீர் வடித்தாரம்மா

குஷ்ட ரோகி அவனைக் - கையினால்

கூசாமல்த் தொட்டாரம்மா (2)

கஷ்டப்படுவோரைக் - கண்டதும்

கண்ணீர் வடித்தாரம்மா (2)

காசு மேல் ஆசை வைத்து

தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்

காசு மேல் ஆசை வைத்து

தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்

ஆரத் தழுவினோரை காசினியில்

கண்டதும் உண்டோ அம்மா

ஆரத் தழுவினோரை காசினியில்

கண்டதும் உண்டோ அம்மா

சிலுவை மரத்தினில் - இரத்தத்தைச்

சிந்தி மரித்தாரம்மா (2)

சிலுவை மீதினிலே இரத்தத்தை

சிந்தி மடிந்தாரம்மா

உலகை மீட்டிடவே இயேசு வந்து

உவந்து மாண்டாரம்மா

உலகை மீட்டிடவே இயேசு வந்து

உவந்து மாண்டாரம்மா

எங்கு நான் சென்றிடுவேன்

இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்

எங்கு நான் சென்றிடுவேன்

இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்

பங்கம் பல வரிணும் அவர்க்காய்

பாடுகள் பல பட்டிடுவேன்

பங்கம் பல வரிணும் அவர்க்காய்

பாடுகள் பல பட்டிடுவேன்

கல்லறை விட்டெழுந்தே - உலகில்

காட்சியளித்தாரம்மா (2)

வல்ல சுத்தாவியினைத் - தரவே

வானில் எழுந்தாரம்மா (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு