துதிப் பாடல்கள்

இயேசு என்னோடு இருப்பதனால்

Yesu Ennodu Iruppadhanaal

இயேசு என்னோடு இருப்பதனால்

எனக்கு ஒன்றும் பயம் - இல்லை

கலங்கிடேன் அஞ்சிடேன்

கவலைகள் எனக்குமில்லை

1. காலையும் மாலையும் - காத்திடுவார்

கருசனை உடையவராய்

இரவில் பகலிலும் உடன் இருப்பார்

உதவிகள் எனக்கு செய்வார் ( இயேசு)

2. ஆகாரின் தேவன் -அவர்

ஆறுதல் உனக்கு அளிப்பார்

அற்புதம் பல - செய்து......

அன்பாய் வாழ்வைப்பார் (இயேசு).

3. தாழ்வில் நம்மை நினைத்தவர்

தாங்கி நடத்திடுவார்

சத்துருவின் வல்லமைகளை அழித்து

சமாதானம் கொடுத்திடுவார் (இயேசு).

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு