இயேசு பிறந்து விட்டார் என்ற செய்தியை
நாங்க சொல்ல வந்தோம்
மகிழ்ந்து பாடுங்க - 2
ஒஹோ பரலோகம் பரலோகம் பரலோகம்
கொண்டு நம்மை சேர்க்கும்
நமைசேர்க்கும் நமைசேர்க்கும்
இயேசு தானே பரலோக தேவன்
இயேசு தானே பரலோக ராஜன் - 2
1. அவர் உலகம் உருவாகும் முன்னே
இருந்த தேவனாம்
அவர் உன்னதத்தில் வாசம் பண்ணும்
ஒரே தேவனாம் - 2
உண்மை உள்ள தேவனவரே
நன்மை செய்திடுவார் - 2
அவர் பிறந்து விட்டார் என்ற செய்தியை
நாங்க சொல்ல வந்தோம்
மகிழ்ந்து பாடுங்க - 2 - இயேசு
2. அவர் பூமியிலே சமாதானம்
உண்டு பண்ணவராம்
அவர் மனுஷர் மீது எப்பொழுதும்
பிரியமுள்ளவராம் - 2
குறைகள் இருந்தால் நிறைவாய் மாற்றி
வாழ செய்பவராம் - 2
3. அவர் கால் வைக்கும் தேசமெல்லாம்
செழிப்புதானய்யா
அவர் நடமாடும் இடமெல்லாம்
நன்மைதானய்யா -2
இயேசு ராஜா எங்க (நம்ம) ராஜா
என்றும் எந்நாளிலுமே 2