இயேசு யாரோ தானே என்று உனக்காய்
ரத்தம் சிந்தியதை மறந்து-2
இஷ்டம் போல் நடக்கின்றாயே
இயேசு சொன்ன வார்த்தை நீயும் மறந்து - உன்
இஷ்டம்போல் நடக்கின்றாயே
இயேசு சொன்ன வார்த்தை நீயும் மறந்து
இயேசு சொன்ன வார்த்தை நீயும் மறந்து
முதலில் தேவனின் ராஜ்ஜியத்தையும்
அவரின் நீதியையும் தேடச் சொன்னாரே-2
நாளைய தினத்தினை குறித்து
கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாரே
சொன்னபடி செய்தாயா
இயேசு சொன்னபடி செய்தாயா
ஒரு கன்னத்தில் உன்னை அறைந்தால்
மறு கன்னத்தை காட்டென்று சொன்னாரே-2
உன்னை நீ நேசிப்பது போலவே
பிறரையும் நேசிக்க சொன்னாரே
சொன்னபடி செய்தாயா இயேசு சொன்ன படி செய்தாயா
பூமியிலே சொத்துக்கள் வேண்டாம்
உனக்கு பரலோகத்தில் தருவேன் என்றாரே-2
உன்னிடத்தில் உள்ளதை எல்லாம் விற்று
தரித்தரருக்கு கொடு என்றாரே
சொன்னபடி செய்தாயா இயேசு சொன்னபடி செய்தாயா
இயேசு ஒருவரே தேவன் என்றும்
வேறு தேவன் இல்லை என்று சொன்னாரே-2
வேறொன்றையும் நீ வணங்கினால் உனக்கு நரகம் தான் என்றுசொன்னாரேசொன்னபடி செய்தாயா இயேசு
சொன்னபடி செய்தாயா