இயேசுக் கிறிஸ்துவே தேவன்
இந்த பூமிக்கு வந்த இரட்சகர்
இந்த பூமிக்கு வந்த இரட்சகர் -2
உலகிற்கு ஒளியாய் வந்தார்
உவமைகளாகப் பேசினார்... - 2
உணர்ந்தவர் அவரை ஏற்றார்
உள்ளத்தில் அமைதியைப் பெற்றார் - 2
குருடர்க்குப் பார்வையைத் தந்தார்
செவிடர்கள் காதைத் திறந்தார் -2
அற்புதங்கள் அவர் செய்தார்
இன்றைக்கும் அதிசயம் செய்வார்- 2
கல்வாரி சிலுவையில் மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார் - 2
மீண்டும் வருகிறேன் என்றார்
சந்திக்க ஆயத்தப்படுவோம் - 2