துதிப் பாடல்கள்

இயேசுவே இரட்சகா

Yesuvae Iratsagaa

இயேசுவே இரட்சகா பாவி என்னில் பிரியமானீரே

இந்த உலகத்தில் மிக பெரியது

உங்க இணையில்லா அன்புதானப்பா

தூர தெரியும் வானம் ஆனா தூரமில்லா உறவு

தூண்டில் போட்டு இழுத்தும் மீன் தரைக்கு சொந்தமாகாது

தானமாக தந்தீரே நான் தேடா வாழ்வொன்றை

தாயும் தந்தையும் நீர்தானே நான் உமக்கு சொந்தமே

நம்பினவர் மறந்த போதும் நன்மை செய்த ஒரே நேசர்

ஒருமுறை கூட என்னை உதறித்தள்ளி போகாதவர்

நீர் வந்தீரே என்னிடம் அன்பு கூர்ந்து

என்னை வென்றிரே முழுமையாய் உம்மில் சேர்த்து

உங்க சமூகம் ஒன்றே அது எனக்கு போதுமே

உங்க கிருபை வரமே அது எனக்கு வேண்டுமே

உங்க வசனத்தை அனுதினமும் நான் தியானம் செய்வேனே

உங்க பெயரை கொடிமுறைதான் என் மூச்சி சொல்லுமே

உலக தோற்றம் முன்னவே தெரிந்து கொண்டீரே உமக்கேனவே

உயிரையே கொடுத்து நல்மேய்ப்பன் என்று உரைத்தீரே

உங்க கைகளில் தவழ்ந்திடும் இசை கருவி நானே

என்னை மீட்டித்தான் சேர்த்துதான் பயன்படுத்துமே

அல்ல அல்ல குறையாத அமுதம் நீங்கப்பா

அள்ளி அள்ளி தருகின்ற வள்ளல் நீங்கப்பா

உங்க பாதம் பின்தொடர்ந்து அடிச்சுவடாய் மாறுவேன்

உங்க ஊழியம் அதை செய்து நல்ல பங்கை பெறுவேனே

தொட்டதெல்லாம் பொன்னாக்க நினைக்கின்ற உலகத்தில்

தொட்டீரே தூசியும் குப்பையான என்னையே

உங்க கிருபை இல்லா வாழ்வதை மனசு விரும்பல

உங்க அன்பு இல்லா வாழ்வதை நினைக்க கூட முடியல

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு