துதிப் பாடல்கள்

இயேசுவே உம் அன்பிலிருந்து

Yesuvae Um Anbilirundhu

இயேசுவே உம் அன்பிலிருந்து

என்னை பிரிக்க முடியுமோ சூழ்நிலைகள் மாறினாலும்

எந்தன் அன்பு மாறுமோ

நீரே எந்தன் வாஞ்சை நீரென் தாகமே

நீரே எந்தன் ஆசை என் இயேசுவே

துன்பங்களால் வியாகுலத்தினாலே உம்மை பிரிவேனா

சோதனையினாலே வேதனையினாலே உம்மை பிரிவேனா

எதை இழந்தாலும் என்ன நேர்ந்தாலும்

என்னை பிரித்திடவே முடியாதே

கண்ணீர் கவலையெல்லாம் -என் அன்பை பிரித்திடுமோ

எந்தன் பிரியமே எந்தன் நேசரே

எந்தனின் உயிரே

எந்தன் மனதை கவர்ந்தவரே இதயநாயகரே

இந்த உலகத்திற்காய் ஆதாயத்திற்காய்

உம்மை நேசிப்பவன் நானல்ல

இன்பமோ துன்பமோ உம்மை

உயிராய் நேசிக்கிறேன்

என்னைவிட உந்தன் உயிரையும் நீரே

பெரிதாய் நினைக்கவில்லை

உம்மைவிட உலகில் எதையும் பெரிதாக

நானும் நினைக்கவில்லை

உயிரினும் மேலாய் உம்மை நினைக்கின்றேன்

எதற்காய் வாழ்கின்றேன்

உமக்காய் எதையும் செய்வேன்

உமக்காய் வாழாமல் - வேறு

எதற்காய் வாழ்கின்றேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு