இயேசுவை ஒருவன் அறியாமல் வாழ்வதை விட
அவன் பிறவாமல் இருப்பதே நலம்
பிறந்த காரணமே அறியாமல் பூமியில் பிறந்தும்
என்ன பலன் அவன் பிறவாமல் இருப்பதே நலம்-2
இயேசுவை முழுவதும் அறியாமலே மேடையில் பேசும் சகோதரனே
தேவ குமாரன் இயேசு என்பதை
வேதத்தில் நீயும் அறியவில்லையோ-2
பாவத்தைப் போக்கவே இயேசு வந்தாரே
மதத்தை பரப்பவில்லை மனதை மாற்ற வந்தார்-2
மதத்தை பரப்பவில்லை மனதை மாற்ற வந்தார்
உலக சரித்திரத்தில் உண்மையுள்ள தெய்வம் நம் இயேசு ஒருவரே கட்டுக்கதைகளும் பொய்யான வரலாறும்
இயேசுவின் சரித்திரத்தில் இல்லையே-2
சிலுவையில் அறையப்பட்ட இயேசு ஒருவரே
வரலாற்றின் முதலும் முடிவும் அவரே-2
வரலாற்றின் முதலும் முடிவும் அவரே
இயேசுவை அறிந்து பரலோகம் போவதே நீயும் பூமியில் பிறந்த பலன்
இல்லையேல் அக்கினி எரிகின்ற நரககடல் தான் உன் முடிவு-2
நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்கிவிட்டது மண்ணிலேயே
மனந்திரும்பு நரகத்தில் நடக்காது-2
மண்ணிலேயே மனந்திரும்பு நரகத்தில் நடக்காது