இயேசுவின் கரங்களில் நான் தவழ்கின்றேன்
இனி என்ன கவலை
கேட்பதையெல்லாம் கொடுத்திடும்
இயேசு இருக்கையில் ஏன் கவலை - 2
என் தேவை என்னவென்று
படைத்தவர் அவர் அறிவார்
என்னையே நான் கொடுத்து விட்டேன்
அவரே பார்த்துக் கொள்வார் - 2
உன் வழியில் என் கால்கள்
தள்ளாடும் நேரத்திலே
ஆண்டவரே உம் அருளாலே
என்னைத் தாங்கிடுமே - 2
என் இதயம் கவலையினால்
மிகுந்திடும் வேளையிலே
ஆண்டவர் தம் ஆறுதலால்
இன்பத்தில் ஆழ்த்துகிறார்