இயேசுவின் நாமத்தினால்
கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம்
நம் அருகினில் இருக்கிறது 2
கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கண்டடைவீர்-2
மாறாத தேவன் மறைவாக்கு
இதுவே மாறாத தென்னாளிலும்-2
பாடுங்கள் பரவசமாய்
பரமன் இயேசு அன்பினையே-2
துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு
மகிமையைக் காணச் செய்யும்- 2
கண்ணீர் துடைத்திடுவார்
கரங்கள் பற்றி நடத்திடுவார்-2
அழைக்கின்ற பக்தர் குரலினைக்
கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2